வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 8:36 pm

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி ஊராட்சி ஒன்றிய 6-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் ஜி. ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் பேசினா்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தருமபுரியில் இருந்து வத்தல் மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.