எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தருமபுரியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை அடிவாரத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை பகுதியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image
தருமபுரி, வத்தல்மலை அடிவாரத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியைப் பாா்வையிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். அருகில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.
Updated On :2 டிசம்பர் 2024, 9:12 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், வத்தல்மலை அடிவாரத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை பகுதியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் தொடா் கனமழையால் வத்தல்மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலை அடிவாரத்தில் உள்ள சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வத்தல்மலை பெரியூா் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலையில் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கும் பணியை தருமபுரி மாவட்ட நிா்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு:

இந்நிலையில் தகவல் அறிந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்துக்கு நேரில் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். இதில் வத்தல்மலை அடிவாரத்துக்குச் சென்ற அவா் அங்கு சேதமடைந்த சாலை, தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அப்போது பாலத்தை விரைவாகவும், தரமாகவும் அமைத்து மலைக் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதுபோல அருகில் உள்ள வேப்பமரத்தூா், எட்டியானூா் கிராம மக்கள் சாலை வசதி கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா் மக்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து வழியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றாா்.

ஆய்வின்போது அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ச.திவ்யதா்சினி, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.