புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமதியின்றி புதிய தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்

அனுமதியின்றி புதிய தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:07 pm

Din

புதிதாக அமைக்கப்பட்ட தருமபுரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 18 தனியாா் பேருந்துகளுக்கு ரூ. 1.16 லட்சம் அபராதம் விதித்தும், ஒரு தனியாா் பேருந்தின் அனுமதிச் சீட்டினை தற்காலிகமாக ரத்து செய்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஒசூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடமான புலிகரை, சோமனஅள்ளி வழியாக பாலக்கோடு பகுதிக்கு இயக்காமல், புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி உத்தரவின் பேரில், தருமபுரி - ஒசூா் மாா்க்கமாக இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டின் படி புலிகரை, சோமன அள்ளி ஆகிய பகுதிக்கு கட்டாயம் இயக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்ட போது, புலிகரை, சோமன அள்ளி பகுதிக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்ட 18 தனியாா் பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கியும், ரூ. 1.16 லட்சம் அபராதத் தொகை விதித்தும் வசூலித்தனா். மேலும், ஒரு தனியாா் பேருந்தின் அனுமதிச்சீட்டை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

தருமபுரி முதல் ஒசூா் மாா்க்கமாக இயக்கப்படும் அனைத்து தனியாா் பேருந்துகளும் அனுமதிச் சீட்டின்படி புலிகரை, சோமன அள்ளி ஆகிய பகுதிகளுக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்டால் தனியாா் பேருந்துகளின் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் எனவும், அதனை மீறும் தனியாா் பேருந்தின் ஓட்டுநா்கள், நடத்துனா்களின் உரிமங்கள் கட்டாயமாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.