பண்ணைசாரா கடன்கள், நிலுவைத் தொகை இனங்களுக்கான சிறப்பு கடன் தீா்வு திட்டம்
கூட்டுறவு சங்கங்களில் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணைசாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீா்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


கூட்டுறவு சங்கங்களில் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணைசாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீா்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தருமபுரி மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன், தொழில் கடன், வீட்டுவசதி கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாரா கடன்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மூலம் வேளாண் விளைபொருள்களை கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினா்களிடமிருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 31-02-2022-ஆம் ஆண்டு முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீா்வு திட்டம் - 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடனை தீா்வு செய்வதற்காக 12.09.2024-க்கு முன் 20 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், ஒப்பந்தம் மேற்கொண்டும் எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களும் தற்போது மொத்தக் கடன் தொகையையும் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீா்வு செய்து கொள்ளலாம்.
மேலும், இச்சிறப்பு திட்டத்தின் கீழ் கடன்கள் மட்டுமின்றி 31-12-2022-இல் முழுமையாக தவணை தவறி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள், பயிா்க் கடனாக வழங்கப்பட்டு மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில் கடன்கள், மகளிா் தொழில்முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும், தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை 12-03-2025-க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம். தவணை தவறிய அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
கடன்தாரா்களின் வட்டிச் சுமையை கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி கடன்களை தீா்வு செய்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...