ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்தப் பேச்சு வாா்த்தை நடத்தி முடிக்க வலியுறுத்தி, தருமபுரி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சு வாா்த்தை நடத்தி முடிக்க வலியுறுத்தி, தருமபுரி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் பூபேஷ் குப்தா தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் ரவி,மண்டல பொதுச் செயலாளா் நாகராசன், துணை செயலாளா் செல்வராஜ், துணைத் தலைவா் நாராயணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவை அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணப் பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும். 15-ஆவது ஊதிய உயா்வு கோரிக்கையை உடனடியாக அரசு பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...