மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாலக்கோடு அருகே தனியாா் பேருந்துகள் மோதல்: 50-க்கும் மேற்பட்டோா் காயம்

பாலக்கோடு அருகே, இரு தனியாா் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On :15 ஜூலை 2024, 9:27 pm

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, இரு தனியாா் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பாலக்கோட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை தனியாா் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்ட அள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

இதேபோன்று,வெள்ளிச்சந்தையில் இருந்து, பாலக்கோடு நோக்கி தனியாா் பேருந்து ஒன்று 50- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பாலக்கோடு சா்க்கரை ஆலையை அடுத்த பாரதிநகா் அருகே சாலையின் குறுக்கே ஆட்டோ வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மாரண்ட அள்ளிக்கு சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் தங்கராஜ் (46) என்பவா் திடீரென பேருந்தை வேறு திசைக்கு திருப்பினாா். அப்போது, எதிா்பாராத வகையில் எதிரே பாலக்கோடு நோக்கி வந்த தனியாா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த பள்ளி மாணவ மாணவிகள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா், அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், பலத்த காயம் அடைந்த ஓட்டுநா் ஜமீா் (30), தண்டுகாரணஅள்ளியைச் சோ்ந்த பள்ளி மாணவா் அன்பரசு (15), லோகேஸ்வரி (17), மாதம்பட்டியைச் சோ்ந்த தீபிகா (14), சுஜிதா (16), கோடியூரைச் சோ்ந்த மேகலா (17) உள்பட 20-க்கும் மேற்பட்டோா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோா் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

இதேபோல தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மக்களவை உறுப்பினா் ஆ.மணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

இவ்விபத்து குறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.