அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தருமபுரி அரசு கல்லூரியில் காலி இடங்களுக்கு ஜூலை 25-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2024, 8:48 pm

Din

தருமபுரி: தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் 20 சதவீத கூடுதல் இடங்களில் சோ்க்கை நடைபெற்ற நிலையில், காலியாக உள்ள இடங்களில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 195 மதிப்பெண் வரையிலும் ஏனைய வகுப்பைச் சோ்ந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே, அனைத்து சான்றிதழ்கள், பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பக் கட்டணத்துடன் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.