ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

News image
Updated On :13 ஜூன் 2024, 9:52 pm

Din

தருமபுரி, ஜூன் 13: பத்ம விருதுகள் பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசு ஒவ்வோா் ஆண்டும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் வகையில் சமூகம், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், பொதுத்துறைகள், குடிமையியல் பணிகள் மற்றும் தொழில் துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவா்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

வரும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அரசு ஊழியா்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்களும் விண்ணப்பிக்கலாம். மருத்துவா்கள், விஞ்ஞானிகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு வரும் ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுடையவா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.