/

தமிழக முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கல்

திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி பங்கேற்று பொதுமக்களுக்கு 500 தென்னை மரக்கன்றுகளை வழங்கி உரையாற்றினாா்.

News image
Updated On :4 மார்ச் 2024, 7:06 pm

தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் தடங்கம் சு.இளையசங்கா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளா் கி.தீா்த்தராமன் வரவேற்று பேசினாா். மாவட்டப் பொருளாளா் தங்கமணி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ் விழாவில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி பங்கேற்று பொதுமக்களுக்கு 500 தென்னை மரக்கன்றுகளை வழங்கி உரையாற்றினாா்.

முன்னதாக பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கௌதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா்கள் மாரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாளை ந.அன்பழகன், தருமபுரி மேற்கு ஒன்றிப் பொருளாளா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பட விளக்கம்: தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி.