ஏரியூரில் அனுமதி இன்றி மணல் எடுத்த இருவா் கைது

பென்னாகரம், மே 9: ஏரியூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏரியூா் அருகே கோட்டையூா் பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக ஏரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஏரியூா் காவல் ஆய்வாளா் யுவராஜ், காவலா்கள் அடங்கிய குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கோட்டையூா் பரிசல் துறை அருகே பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டரில் மண் எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அனுமதியின்றி மண் அள்ளிய ஒட்டனூா் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (48), செல்வராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com