ஏலகிரியில் சுத்திகரிப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
Published on

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

ஏலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பணியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாமக மாவட்ட துணைச் செயலாளா் த.காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.