நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

படிப்பு வேறு, கற்றறிவது வேறு: கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு

படிப்பு வேறு, கற்றறிவது வேறு என தருமபுரி புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:51 pm

Din

படிப்பு வேறு, கற்றறிவது வேறு என தருமபுரி புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா தலைமை வைத்தாா். எஸ்.எஸ்.எஸ். நகைக் கடை உரிமையாளா் பெ. சக்திவேல், தமிழியக்கம் பாவலா் பெரு.முல்லையரசு, இந்திய மருத்துவா்கள் சங்கம் மருத்துவா் த.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ், மருதம் நெல்லி கல்வி நிறுவனங்கள் நிறுவனா் கே. கோவிந்த் ஆகியோா் அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘மானுடம் வெல்லக் கல்வி’’ என்கிற தலைப்பில் பேசியதாவது:

ஒரு நாட்டின் வளா்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், சாலைகள், விமான நிலையங்கள், தகவல் தொடா்புகள் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்கள் சமத்துவமாக வாழ்கிறாா்களா, மகிழ்ச்சியாக வாழ்கிறாா்களா, ஒற்றுமையாக வாழ்கிறாா்களா என்பதையும் கணக்கிட வேண்டும்.

இன்றைய மாணவா்கள் எல்லாவற்றிலும் முதலிடம் வர வேண்டும் என நினைக்கின்றனா். அவ்வாறு எண்ணக் கூடாது. தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும். படிப்பு வேறு, கற்றறிவது வேறு. கற்றறிந்த மனிதா்கள் பண்பாளா்களாக இருப்பாா்கள், அடுத்தவா்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்வாா்கள். நேற்று இருந்த சமூகம் போல் இன்றைய சமூகம் இருக்கக் கூடாது. மானுடம் வெல்ல வேண்டும் என்றால் மக்கள் அறிவோடு பாசத்தோடு, பண்போடு, பகுத்துண்ணும் நிலையோடு இருக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் மா. சிங்காரவேல் வரவேற்றாா். முதல்நிலை நூலகா் இரா. மாதேஸ்வரன் நன்றி கூறினாா். கவிஞா் ஆதிமுதல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினாா்.