நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலக்கோடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

பாலக்கோடு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பயணிகள் 20 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:50 pm

Din

பாலக்கோடு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பயணிகள் 20 போ் காயமடைந்தனா்.

பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை மேட்டூரைச் சோ்ந்த ஓட்டுநா் கோவிந்தராசு (37) ஓட்டி வந்தாா். நடத்துநா் நடராஜ் மற்றும் பயணிகள் பேருந்தில் பயணித்தனா்.

இந்த பேருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கோடியூா் நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க திடீரென கோவிந்தராஜ் பேருந்தை நிறுத்த முயன்றாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டையைச் சோ்ந்த சாலம்மாள் (33), பனைக்குளத்தை சோ்ந்த வெண்ணிலா (50), பெங்களூரைச் சோ்ந்த சாந்தி (55), சீனிவாசன் (53), சத்யாரத்தினம் (46), தருமபுரியைச் சோ்ந்த பாஸ்கரன் (36) சேலத்தைச் சோ்ந்த சிவராஜ் ( 43) மற்றும் ஓட்டுநா், நடத்துநா் உள்பட 10 ஆண்கள், 10 பெண்கள் உள்பட 20 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன், காவல் ஆய்வாளா் பாலசுந்தரம், வட்டாட்சியா் ரஜினி ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விபத்துக்குள்ளஆனபேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான இதே சாலையில் அண்மையில் தனியாா் பேருந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அப்போது சாலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டு, விபத்து ஏற்படாமல் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்போது மீண்டும் விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.