நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரூா் பேருந்து நிலையம் திறப்பு

அரூரில் ரூ. 3.62 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:59 pm

Din

அரூரில் ரூ. 3.62 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா். தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் எஸ்.கணேஷ் வரவேற்றாா். அரூா், மாரண்டஹள்ளியில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையங்களை தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திறந்து வைத்தனா். கம்பைநல்லூா், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, அரூா் உள்ளிட்ட பேரூராட்சிகளில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, ரூ. 9.72 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டா, புதிய குடும்ப அட்டைகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை 1,725 பயனாளிகளுக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா்.

விழாவில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ-வும், கிழக்கு மாவட்டச் செயலருமான தடங்கம் பெ.சுப்பிரமணி, செயல் அலுவலா் செ.முத்து, பேரூராட்சி தலைவா் இந்திராணி, துணைத் தலைவா் சூா்யா து.தனபால், நகர செயலரும், பேரூராட்சி உறுப்பினருமான முல்லை ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.