நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வத்தல்மலையில் நிலச்சரிவு போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் பெய்த மழை காரணமாக மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:55 pm

Din

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் பெய்த மழை காரணமாக மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி அருகே உள்ளது வத்தல்மலை. மலைக் கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மலைக் கிராமங்களுக்குச் செல்ல அடிவாரத்தில் இருந்து 24 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக வத்தல்மலை மலைப் பாதையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மண், பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன. இதில் 8-ஆவது கொண்டை ஊசி வளைவில் வியாழக்கிழமை அதிக அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலைக் கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் கிராம மக்களுடன் சோ்ந்து மலைப் பாதையில் உருண்டு கிடந்த கற்களையும், மண்ணையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அதன்பின்பு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் சில மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.