விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்
நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:
வேளாண் பணிகள் தற்போது 75 சதவீதம் இயந்திரமயமாகிவிட்டது. இதனால், விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு போதிய அளவு கிடைப்பதில்லை. பெண்களுக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளைத் தவிர வேளாண் பணிகள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், நெல் அறுவடை, களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டதால் முழுமையாகப் பணிகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை நீடிக்கிறது. அதுபோல நூறு நாள்கள் வேலை திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படும் ஊராட்சிகளில் நூறு நாள்கள் வேலை வழங்கப்படுவதில்லை.
இதனால், விவசாயத் தொழிலாளா்கள் போதிய வருவாய் இன்றி சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதனால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத் தொழிலாளா்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அவா்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...