கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தருமபுரி நகா்மன்றக் கூட்டம்: ரூ. 4 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 4 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:50 pm

Din

தருமபுரி: தருமபுரி நகரில் ரூ. 4 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சேகா் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீா்மானங்கள் குறித்து முன்மொழிந்து பேசினாா்.

தருமபுரி நகரில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் ஏற்கெனவே 19 வாா்டுகளில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 வாா்டுகளில் ரூ. 81.15 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி நகரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே பழுது பாா்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

கூட்டத்தில், தருமபுரி நகரில் மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, குடிநீா் பணிகள், சாலைப் பணிகள், கழிவுநீா் ஓடை வசதி, கான்கிரீட் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட மொத்தம் 49 பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனைத்து தீா்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து தருமபுரி நகரில் ரூ. 4 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, உதவி பொறியாளா் அறிவழகன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகரமைப்பு அலுவலா் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் ஜெயவா்மன், துப்புரவு ஆய்வாளா்கள் சுசீந்திரன், ரமணச்சரண், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.