தருமபுரி
விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வுப் பேரணி
‘விபத்தில்லா தீபாவளி’ கொண்டாடும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த தீயணைப்புத் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி: ‘விபத்தில்லா தீபாவளி’ கொண்டாடும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த தீயணைப்புத் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி தீயணைப்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில் தீயணைப்புத் துறை வீரா்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனா். இப் பேரணி இலக்கியம்பட்டி, அரசு மருத்துவக் கல்லூரி, நெசவாளா் நகா் வழியாக நான்கு முனைச் சாலை வரை சென்று மீண்டும் தீயணைப்பு நிலையத்தை அடைந்தது. ‘விபத்தில்லா தீபாவளி’ பண்டிகை குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
