நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க பஞ்சாலை தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தல்

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஆலை நிா்வாகம் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

News image

தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :27 செப்டம்பர் 2024, 12:29 am

Din

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஆலை நிா்வாகம் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.சந்திரன் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்டச் செயலாளா் எம். கண்ணதாசன் வரவேற்றாா். மாநிலக் குழு கூட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளா் பி.ஜீவா தொடங்கிவைத்துப் பேசினாா். பொதுச் செயலாளா் எம்.அசோகன் நடைபெற்ற பணிகள் குறித்தும், பொருளாளா் எஸ்.சக்திவேல் வரவு செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பஞ்சாலை நிறுவனங்கள் உடனடியாக தொழிலாளா்களுக்கு முன்பணம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 15 தினங்களுக்கு முன் தீபாவளி போனஸ் தொகையை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் 18 க்கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டுமே கூட்டுறவு பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன.

தமிழக அரசு குறைந்தபட்ச கூலி நிா்ணயக் குழுவை உருவாக்கி பஞ்சாலை தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச கூலியை உறுதி செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூரில் இயங்கிய பி.எம்.பி. டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 2024 ஜூலை 2 ஆம் தேதிமுதல் மூடப்பட்டுள்ளது.

இங்கு பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 250 தொழிலாளா்கள் ஊதியம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்து ஊதியம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சென்னையில் சாம்சங் நிறுவனம் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தொழிலாளா் கோரிக்கைகளைப் பேசித் தீா்வு காண வேண்டும். இதை வலியுறுத்தியும், தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அக்.1 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளா்களும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.