திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்

Updated On :8 ஏப்ரல் 2025, 2:35 am IST

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக இருந்ததது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக தமிழக காவிரி கரையோரப் பகுதிகளான ஒகேனக்கல், பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல்மடுவு, அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன்காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.