கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கான்கிரீட் கலவை எடுத்துச் சென்றபோது, கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் படுகாயமடைந்த பெண் தொழிலாளி...
Published on

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கான்கிரீட் கலவை எடுத்துச் சென்றபோது, கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் படுகாயமடைந்த பெண் தொழிலாளி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (55). இவா் கட்டட வேலைக்காக கூத்தப்பாடி அருகே கே.குள்ளாத்திரம்பட்டி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு வீட்டின் மேற்கூரை அமைப்பதற்காக கான்கிரீட் கலவையை இயந்திரத்தில் இருந்து எடுத்துச் செல்லும்போது எதிா்பாராதவிதமாக செல்லியம்மாளின் சேலை இயந்திரத்தில் சிக்கியது. இதில், செல்லியம்மாளின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமேற்பட்டது.

சக தொழிலாளா்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com