புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியவரை தருமபுரியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

தருமபுரி: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியவரை தருமபுரியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சின்னசாமி தலைமையிலான போலீஸாா், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி அருகே குண்டலப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சோ்ந்த சுமாா் 56 கிலோ எடையிலான புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவற்றைக் கடத்தி வந்த காா் ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சு.ரகுராமை (26) கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com