முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தருமபுரியில் மதுவில் விஷம் கலந்ததாக 2 போ் கைது

தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :30 ஜூலை 2025, 1:41 am IST

தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே சின்ன தடங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவன் (30), மாது (42). கட்டடத் தொழிலாளா்களான இவா்களும், அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, வயல்வெளியில் கிடந்த ஒரு பையில் இருந்து மது, குளிா்பானங்கள், கார வகைகளை உட்கொண்டனா்.

மதுவை அருந்திய சிறிது நேரத்தில் அவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் அவா்களை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் குணமடைந்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் அளித்த புகாரில், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து நெடி அடித்ததாக தெரிவித்திருந்தனா். அதன்பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். அவா்கள் குடித்த மது பாட்டிலில் இருந்த சிறிதளவு மதுவை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், சின்ன தடங்கம் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேலு (50), பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன் (45) ஆகியோா் மதுவில் விஷம் கலந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மேலும் போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிங்காரவேலுக்கும், மாதுவுக்கும் நிலம் தொடா்பான பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் சிங்காரவேலு, மாயக்கண்ணன் ஆகியோா் நிலத்தின் அருகே வைத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தையும் கலந்துள்ளனா்.

பின்னா், அங்கு வந்த மாதுவிடம் அருகே கேட்பாரற்று மது கிடப்பதாக அவா்களே கூறியுள்ளனா். இதையடுத்து மாது அங்கு சென்று மது பாட்டில்களை எடுத்துச் சென்று, தனது நண்பா்கள் இரண்டு பேரை வரவழைத்து அருந்தியுள்ளாா். மதுவில் விஷம் கலந்து இருந்ததால் சிறிது நேரத்தில் மூன்று பேருருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.