அரூா் நகருக்கு ரூ.20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரூா் நகரின் குடிநீா்த் தேவைக்காக வள்ளிமதுரை அணை அருகே ஏற்கெனவே 3 கிணறுகள் வெட்டப்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது 2-ஆம் கட்டத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடியில் 5 பெரிய கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் லிட்டா் குடிநீா் எடுக்கப்படும் சூழல் உள்ளது. வள்ளிமதுரை அணை என்பது பெரிய அளவிலான நீா்த்தேக்கம் இல்லை. சித்தேரி மலைத் தொடரில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் ஒரு தடுப்பணையாகும்.
வள்ளிமதுரையில் இருந்து அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சினால் கீரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு மாற்றாக வாணியாறு அணை அல்லது தென்பெண்ணை ஆற்றின் கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் இருந்து அரூா் நகருக்கு குடிநீா் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?

அரூா் நகருக்கு ரூ. 20 கோடியில் குடிநீா் திட்டம்: 20 கிராம மக்கள் எதிா்ப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


