பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.

News image

பூமரத்துப்பள்ளம் கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:49 am IST

பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.

பாலக்கோடு தொகுதியில் பூமரத்துப்பள்ளம், எருதுகூடஅள்ளி, கனவனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மேலும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை அளித்துள்ளாா். பாலக்கோடு தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தோ்தலில் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.