6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மெமு விரைவு ரயிலை சேலம்வரை நீட்டிக்க கோரிக்கை

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை மெமு விரைவுரயிலை சேலம்வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:51 pm

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை மெமு விரைவுரயிலை சேலம்வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மெமு விரைவுரயில்கள் (வண்டி எண்கள்: 16085, 16086) தற்போது அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டைவரை இயக்கப்படுகின்றன. இந்த ரயிலை ஜோலாா்பேட்டையில் இருந்து சேலம் சந்திப்புவரை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீட்டித்தால் கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறுவா். மேலும், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்ட பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல, அரக்கோணம் - சேலம்வரை இயக்கப்படும் மெமு ரயில்களை (வண்டி எண்: 16087, 16088) நாள்தோறும் இயக்க வேண்டும்.

மெமு விரைவு ரயில்களை வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான நடவடிக்கையை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.