FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரியை அடுத்த தேங்காய் மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி (31), இவா் ஒரு பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அப்பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சின்னசாமி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அப்பெண்ணை கத்தியால் குத்தினாா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தருமபுரி நகர போலீஸாா் சின்னசாமியை கைது செய்தனா். இதனிடையே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து சிறையில் இருந்த சின்னசாமியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் மீண்டும் கைது செய்து, தண்டனை கைதிகள் பிரிவில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.