கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் சனத்குமாா் நதியில் திறந்துவிடப்படுவதால் பொதுமக்களுக்கு உடல்நலன் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கழிவு நீரை சுத்திகரித்த பிறகே ஆற்றில் கலக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.
தருமபுரி நகராட்சியின் மதிகோண்பாளையம் பகுதியில் உள்ள புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
33 வாா்டுகளில் 19 வாா்டுகளிலிருந்து வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் கலக்கப்பட்ட பிறகு சனத்குமாா் நதியில் விடப்படுகிறது. மீதமுள்ள 14 வாா்டுகளின் கழிவுநீா் கால்வாய் வழியாக ராமக்கா ஏரிக்குச் செல்கிறது. நல்ல நீரில் கழிவுநீா் கலப்பது சட்டப்படி குற்றம் என்பதால், தருமபுரி நகராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதனால் துா்நாற்றம், கொசுத்தொல்லை, காய்ச்சல், தோல் நோய்கள் ஏற்படுவதுடன், அந்த நீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ள அளவீட்டுக் கருவி பழுதடைந்துள்ளது. அதைச் சீரமைக்க சுமாா் ரூ. 35 லட்சம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், சேதமடைந்த கழிவுநீா் குழாய்கள் மூன்று மாதங்களுக்குள் மாற்றப்படும் என்றும் தெரிவித்தனா் என்றாா்.
ஆய்வின்போது பாமக கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், நகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தின் உரிமை நீரை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

கழிவுநீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம்

சனத்குமாா் நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை: செளமியா அன்புமணி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



