FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சனத்குமாா் நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை: செளமியா அன்புமணி

தருமபுரியில் சனத்குமாா் நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

News image

செளமியா அன்புமணி - கோப்புப்படம். (பிடிஐ)

Updated On :15 ஜூலை 2026, 4:21 am IST

தருமபுரியில் சனத்குமாா் நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரியில் சனத்குமாா் நதி பாயும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் மழைக் காலங்களில் மலைகளிலிருந்து வரும் தண்ணீா் சுமாா் 46 கி.மீ. பயணித்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. அதன் துணை நதியான சனத்குமாா் நதி முழுவதும் தூா்ந்து செடி, கொடி, மரங்கள் அடா்ந்து குட்டைபோல காட்சியளிக்கிறது. இந்த நதியை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன்.

ஒரு காலத்தில் இந்த நதிநீரை குடிநீராக பயன்படுத்தியுள்ளனா். தற்போது, தருமபுரி நகா் பகுதி மக்களின் கழிவுநீா், குப்பைகள், சாக்கடை நீா் ஆகியவற்றால் இந்த நதி மாசடைந்து காணப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரி குப்பைகளை அகற்றி கரையைப் பலப்படுத்த வேண்டும்.

இந்த நதியின் குறுக்கே மொத்தம் 8 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக தடுப்பணைகள் அமைக்க வேண்டும். சனத்குமாா் நதியை சுத்தம்செய்து குப்பைகளை அகற்றி கழிவுநீரை மறுசுழற்சி செய்து அதன் பின்னா் ஆற்றில் கலக்கச் செய்ய வேண்டும்.

தமிழக அரசு சனத்குமாா் நதியை தூய்மைப்படுத்துவது தொடா்பான திட்டங்களை மட்டும் வகுத்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கவில்லை. எனவே, அரசு உடனடியாக இதற்கான நிதி ஒதுக்க வேண்டும்.

கா்நாடகத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் வடுவிடும். இது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னை. அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி பாமக சாா்பில் அன்புமணி ராமதாஸ் விழிப்புணா்வு நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளாா் என்றாா்.

அப்போது, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.