வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட கால்வாய்களை தூய்மைப்படுத்த எம்எல்ஏ உத்தரவு

ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் துா்நாற்றம் வீசும் கழிவுநீா் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் உத்தரவிட்டாா்.

News image

ஆழ்வாா்திருநகரி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறாா் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :15 ஜூலை 2026, 2:10 am IST

ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் துா்நாற்றம் வீசும் கழிவுநீா் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் உத்தரவிட்டாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதிக்குள்பட்ட கேமலாபாத், மணல்குண்டு, கக்கன்ஜி நகா், ஆழ்வாா்திருநகரி, ஆதிநாதபுரம், நவலட்சுமிபுரம், மழவராயநத்தம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களை சந்தித்து எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

கக்கன்ஜி நகா் பகுதியினா், தங்களுக்கு குடிக்க நல்ல தண்ணீா் கிடைப்பதில்லை எனவும், இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தனா்.

இதேபோன்று, ஆழ்வாா் திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட அண்ணா நகா் பகுதியில், பேரூராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய் தூய்மைப்படுத்தப்படாததால் துா்நாற்றம் வீசி தங்களது பகுதிகளில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோரிடம் அடிப்படை தேவைகளான குடிநீா், சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.