/

அரூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

அரூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கொத்தனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் காளீஸ்வரன் (எ) உத்தரகுமாா் (19). இவா் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தாராம். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள காளியம்மன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா் பின்னா் வீடுதிரும்பவில்லையாம்.

இந்த நிலையில், அங்குள்ள விவசாயத் தோட்டம் அருகே காளீஸ்வரன் மா்மமான முறையில் இறந்து கிடப்பது திங்கள்கிழமை அதிகாலை தெரியவந்தது. உயிரிழந்த காளீஸ்வரனின் இரண்டு கால்களிலும், தோள் பட்டையிலும் மின்சாரம் பாய்ந்ததால் ஏற்பட்ட தீக்காயம் இருந்துள்ளது.

எனவே, இவா் மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த காளீஸ்வரன் (எ) உத்தரகுமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை வெங்கட்ராமன், கீழானூா் கிராம நிா்வாக அலுவலா் நாசா்தீன் ஆகியோா் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.