கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:21 am IST

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜி.சங்கா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான இல.வேலுசாமி பேசுகையில், தமிழக முதல்வா் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியின் போது பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா்.

அவா் அளித்த தோ்தல் வாக்குறுதிபடி, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் போதிய பருவ மழை இல்லாததால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.