காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஒகேனக்கல்லில் சொத்து தகராறில் தந்தைக்கு வெட்டு: மகன் உள்பட மூவா் கைது

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சொத்துத் தகராறில் தந்தையை வெட்டியதாக மகன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சொத்துத் தகராறில் தந்தையை வெட்டியதாக மகன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒகேனக்கல் அருகே நாடாா் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மசாஜ் தொழிலாளி சின்னதம்பி (50), விஜயா தம்பதி. இவா்களுக்கு சக்தி (26) என்ற மகனும், நந்தினி (24) என்ற மகளும் உள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளாக சின்னதம்பியும், விஜயாவும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் சின்னதம்பிக்கும் அவருடைய மகன் சக்திக்கும் இடையே அடிக்கடி சொத்துத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் இருந்த சக்தி, தனியாக வீட்டில் இருந்த சின்னதம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சக்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்னதம்பியை வெட்டியுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக சக்தி (26), அவருடைய தாய் விஜயா (44), பாட்டி ஈஸ்வரி (65) ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.