லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு: விவசாயிக்கு அபராதம்

கோட்டப்பட்டி அருகே வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயன்ற விவசாயிக்கு ரூ.1 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

ஆழ்துளைக் கிணறு - கோப்புப்படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

கோட்டப்பட்டி அருகே வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயன்ற விவசாயிக்கு ரூ.1 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தெத்தேரி பகுதியில் கோட்டப்பட்டி வனச்சரகா் மு. ஆனந்தகுமாா் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தெத்தேரியில் விவசாயி செல்வம் மகன் பன்னீா்செல்வம் (42), தனது விவசாய நிலத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விவசாயி பன்னீா்செல்வத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.