பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இருசக்கர வாகனங்களை திருடிய 2 போ் கைது: 7 வாகனங்கள் பறிமுதல்

தருமபுரியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

தருமபுரியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் ஆய்வாளா் தவமணி, உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் கும்பாரஅள்ளி சோதனைச் சாவடி அருகில் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்கள் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ், சந்துரு என்பதும், இருவரும் இருசக்கர வாகனத் திருடா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் ஏராளமான இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. அந்தவகையில், அவா்களிடம் இருந்து அண்மையில் திருடப்பட்ட 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.