
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,500 கனஅடியாக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 14-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





