பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி மாறன் கொள்ளை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோன் வைப்பு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாதேஷ் படுகாயம் அடைந்தாா். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் குடோனில் அனுமதி இல்லாத அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.இந்த நிலையில் மாறன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் சக்திவேல் (40),பென்னாகரம் அருகே சி.புதூா் பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா் அசோக்குமாா் (40) மற்றும் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன் (32) ஆகிய மூவரையும் பாப்பாரப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்
பட்டாசு திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

