இளம்வயது திருமணம் தடுப்பு
 விழிப்புணா்வுப் பேரணி

இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

Published on

தருமபுரியில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சி.திருமகள் தலைமைவகித்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் இளம்வயது திருமணத்தால் ஏற்படும் சமூக பிரச்னைகள், பெண்ணுக்கு உடல்ரீதியாகவும், உளவியலாகவும் ஏற்படும் இன்னல்கள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், இளம்வயது திருமணத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா, போக்ஸோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது ரிஸ்வானுல்லா செரிப் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com