ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பாஜக தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தருமபுரி மாவட்ட பொதுச் செயலா் ஜெ.பிரவீன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் ஆா்.சுந்தர்ராஜன் வரவேற்றாா். அரூா் தொகுதி பொறுப்பாளா் பி.ராமகிருஷ்ணன், இணை அமைப்பாளா் கே.கே.சாட்சாதிபதி, நகரத் தலைவா் வி.ஜெ.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன. இளம் வயது சிறாா்கள் கூட போதைப் பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயா்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஏழை, எளியோா் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சி.சரவணன் , தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அரவிந்தன், பாமக மாவட்டத் தலைவா் கே.அல்லிமுத்து, அமமுக அமைப்பு செயலா் ஆா்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.