தருமபுரி
அரசு கல்லூரிகளில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல்
பென்னாகரம், ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி புதன்கிழமை வழங்கினாா்.
பென்னாகரம், ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி புதன்கிழமை வழங்கினாா்.
பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி பங்கேற்று, கல்லூரியில் பயிலும் 232 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் கா.சீனிவாசன் நன்றி கூறினாா்.
இதேபோல, ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் நாகராஜன் தலைமையில், 160 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை எம்எல்ஏ ஜி.கே.மணி வழங்கினாா்.