தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சூளகிரி கிளை விரைவில் புதிய முகவரியில் அமைந்துள்ள கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு வழங்கி இணைப் பதிவாளா் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சூளகிரி கிளை, ஒசூா் சாலை, அமீா் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியின் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் வகையில், கிருஷ்ணகிரி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது என்றாா்.