மின்சிக்கன வாரவிழா: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள்
பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் நடுநிலைப் பள்ளியில் மின்சிக்கன வாரவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் சாா்பில் பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆற்றல் மன்றம் மூலம் மாணவா்களிடையே மின் சிக்கனம், மின்சாதனப் பொருள்களை கையாள்வதில் கவனமாக இருத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வற்றும் வளங்கள் மற்றும் வற்றாத வளங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மின்சிக்கன வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 7-ஆம் வகுப்பு மாணவி மு.ராகினி,
இரண்டாமிடம் பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி மு.ஜெயாமணி, மூன்றாமிடம் பெற்ற 6-ஆம் வகுப்பு மாணவா் சி.சுஜித்குமாா் ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் ஆகியவற்றை பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி வழங்கினாா்.
