150 காசநோய் பயனாளா்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கல்

தருமபுரி அரசு மருத்துவமனையில் 150 காசநோய் மருத்துவப் பயனாளா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காசநோய் மருத்துவப் பயனாளா்களுக்கு  ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்.
காசநோய் மருத்துவப் பயனாளா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்.
Updated on

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் 150 காசநோய் மருத்துவப் பயனாளா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கனரா வங்கி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகா் தலைமை வகித்தாா். தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நிகழ்வில் 150 காசநோய் மருத்துவப் பயனாளா்களுக்கு தலா ரூ. 500 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.

இதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் சிவகுமாா், உள்ளிருப்பு மருத்துவா் நாகவேந்தன், கனரா வங்கி மண்டல மேலாளா் பி.பி. ராவ், கோட்ட மேலாளா் வினிஷ்பாபு, மேலாளா் நீல மணிகண்டன், மக்கள்தொடா்பு அலுவலா் குரு பிரசாத் உள்ளிட்ட கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com