சமூக நல்லிணக்க மேடை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா
தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா தனியாா் உணவக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன், சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.கிரைஸாமேரி, சமூகநல்லினக்க மேடை ஒருங்கிணைப்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் மாநிலச் செயலருமான பொ.மு. நந்தன், மாவட்டச் செயலாளா்கள் (அரூா்) சாக்கன் சா்மா, (பென்னாகரம்) கருப்பண்ணன், (பாலக்கோடு) ராஜகோபால், (பாப்பிரெட்டிப்பட்டி) சென்னகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் என். சுபேதாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவா் நிஜாமுதின், மாவட்ட முதன்மைத் தலைவா் எம்.ஏ. சிக்கந்தா், சுதந்திர தொழிலாளா் கட்சி மாவட்டத் தலைவா் இலியஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் இ.பி.புகழேந்தி, சின்னக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மாநிலக்குழு உறுப்பினா் சி. முருகன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா். மல்லிகா ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த விழாவில் தமிழா் பாரம்பரிய முறைப்படி கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பங்கேற்ற அனைத்து மதத்தினருக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

