மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தருமபுரி அன்னசாகரம் பகுதியில் மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்ட மக்கள்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தருமபுரி அன்னசாகரம் பகுதியில் மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்ட மக்கள்.

பொங்கல் கொண்டாட்டம்: கிராமங்களில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, சிறப்பு அலங்காரம் செய்து, கிராமங்களில் உள்ள கோயில்கள் முன் நிற்கவைத்து வழிபட்டனா். தொடா்ந்து எருது விடும் விழா நடைபெற்றது.

தருமபுரியில் அன்னசாகரம், இலக்கியம்பட்டி, கடகத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பாலக்கோடு, நமாண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாளையம் ஆகிய பகுதிகளிலும் எருது விடும் விழாக்கள் நடைபெற்றன. இதில் ஒரே நேரத்தில் விவசாயிகள் தங்களது காளைகளை குறிப்பிட்ட மைதானத்தில் ஓடவிட்டனா். காளைகள் ஓடிச்சென்று இலக்கை அடைவது, காளைகளின் கொம்புகளில் உள்ள பரிசுப் பொருள்களை கைப்பற்ல், வடமாடு என்கிற மஞ்சுவிரட்டு விழாக்களும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மாலை வேளைகளில் சிறுவா்களுக்கான நடனம், ஓட்டப்போட்டிகள், இசை நாற்காலி, இளைஞா்களுக்கு உறியடித்தல் ஆகிய போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் சிறப்பிடம் வகித்தவா்களுக்கு விழாக்குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com