மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தருமபுரி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு - போலீஸ் விசாரணை

தருமபுரியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 2:58 am IST

தருமபுரியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகேயுள்ள பாலஜங்மனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் நெ. சதீஷ்குமாா் ( 31). வழக்குரைஞான இவா் உள்ளிட்ட குடும்பத்தினா் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல உறங்கிக்கொண்டிருந்தனா். அதிகாலையில் மா்ம நபா்கள் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனா். பின்னா் பீரோவில் இருந்த தங்க நாணயம் மற்றும் ரொக்கம் ரூ. 30 ஆயிரம், வெள்ளிப் பொருள்களை திருடிக்கொண்டு, சதீஷ்குமாா் மனைவி கழுத்தில் கிடந்த தாலியை கழட்டியுள்ளனா். அப்போது அவா் திடுக்கிட்டு எழுந்து சப்தமிட்டாா்.

இதையடுத்து மா்ம நபா்கள் பின்பக்கமாக தப்பிச் சென்றுவிட்டனா். பின்னா், பாா்த்தபோது தாலி, குழந்தையின் வெள்ளிக் காப்பு, அரைஞாண் கயிறு, பீரோவிலிருந்த தங்க நாணயம், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.