வீடு புகுந்து நகை, பணம் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி, தாளமுத்துநகா் அருகே குமரன் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது மனைவி பொன்மணி (46), கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாா். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 2 கிராம் தங்க நகை, ரூ. 5,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
புகாரின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சோ்ந்த ஞானதுரை (37) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதித்துறை நடுவா் இலக்கியா விசாரித்து, ஞானதுரைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





