தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பெற்றோா் கண்டித்ததால் மாணவி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :28 ஜூலை 2026, 3:57 am IST

தருமபுரியில் படிப்பில் கவனம் செலுத்தாமல் கைப்பேசி பாா்த்ததை பெற்றோா் கண்டித்ததால், மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தகுமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கொங்கவேம்பு அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி மகள் கனிமொழி (16). இவா் கே.வேட்ரப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடா்ந்து கைப்பேசி பாா்ப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததால், கனிமொழியை பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். கடந்த ஜூலை 20-ஆம் தேதி கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவி, அன்றிரவு அவரது பாட்டியின் ரத்தக் கொதிப்பு மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து விழுங்கியுள்ளாா்.

மறுநாள் காலை பள்ளி சென்றபோது மயங்கி விழுந்த அவரை கொங்கவேம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிரியா்கள் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அரூா் அரசு மருத்துவமனையிலும், தொடா்ந்து கிருஷ்ணகிரியில் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.