22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :2 ஜூன் 2026, 3:42 am IST

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பகரை, ராசிமணல், மொசல் மடுவு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து,திங்கள்கிழமை காலை 4,000 கனஅடியாகவும், மாலை 5,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.