‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :23 மே 2026, 2:01 am IST

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ள போதிலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.